/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூடைப்பந்து போட்டிக்கான மாவட்ட அணி தேர்
/
கூடைப்பந்து போட்டிக்கான மாவட்ட அணி தேர்
ADDED : மார் 02, 2025 01:23 AM
கூடைப்பந்து போட்டிக்கான மாவட்ட அணி தேர்
கிருஷ்ணகிரி:பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில், கூடைப்பந்து போட்டிக்கான மாவட்ட அணி தேர்வு நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரி உள்விளையாட்டு அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான, பள்ளி அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு, 16 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் தேர்வு நடந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வநாயகம், திருமலை மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
இவர்கள், மாவட்ட அணியில் விளையாடவுள்ள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்தனர். தேர்வான வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் நடத்தும், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.