/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கம்பெனியில் திருடிய நான்கு பேர் கைது
/
கம்பெனியில் திருடிய நான்கு பேர் கைது
ADDED : மார் 02, 2025 01:24 AM
கம்பெனியில் திருடிய நான்கு பேர் கைது
ஓசூர்:மத்திகிரி, மெத்தை கம்பெனியிலிருந்து பணம், மெத்தை திருட்டில் ஈடுபட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அடுத்த நாகொண்டப் பள்ளியில் மெத்தை நிறுவனம் உள்ளது. இதில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு, சர்ஜாபுரத்தை சேர்ந்த தீபக், 35, என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பிப்.,6ல், கம்பெனியில் உள்ள மெத்தைகளின் இருப்பு மற்றும் கணக்கு வழக்குகளை சரி பார்த்தார். அப்போது கம்பெனியில் இருந்து, 2.24 லட்சம் மதிப்புள்ள, 32 மெத்தைகள் திருட்டு போயிருந்தது தெரிந்தது. இது குறித்து அவர் மத்திகிரி போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், மெத்தைகள் டெலிவரி பிரிவில் பணிபுரியும் சேலம் மாவட்டம், வி.கொங்காரப்பட்டி ராபர்ட் முத்தப்பா, 23, கேதுநாயக்கன்பட்டி பாலச்சந்தர், 24, ஓசூர் அடுத்த கோபனப்பள்ளி, பிரவீன், 27, தேன்கனிக்கோட்டை அடுத்த பூதம்பட்டி, பூவரசன், 27 உள்ளிட்டோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் நால்வரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ஆறு மெத்தைகள், 98,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்த பூபதி என்பவரை தேடி வருகின்றனர்.