ADDED : மார் 13, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காய்கறி மாதிரி வயல் கண்காட்சி
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே நெல்லுார் கிராமத்தில், தனியார் விதை மற்றும் விற்பனை நிறுவனம் சார்பில், காய்கறிகளின் மாதிரி வயல் கண்காட்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் திறந்து வைத்தார். கண்காட்சியில், தக்காளியின் பல்வேறு ரகங்கள், வெண்டை, வெள்ளரி, பீட்ரூட், குடை மிளகாய் உள்ளிட்ட உயர் ரகங்கள் இடம் பெற்றிருந்தன. பயிர் மற்றும் உரம் மேலாண்மை குறித்து, விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.