/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின் கம்பியில் உரசி வைக்கோல் லாரியில் தீ
/
மின் கம்பியில் உரசி வைக்கோல் லாரியில் தீ
ADDED : ஏப் 06, 2025 01:01 AM
மின் கம்பியில் உரசி வைக்கோல் லாரியில் தீ
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கவுண்டனுார் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் வேடியப்பன், 34. சொந்தமாக ஈச்சர் மினி லாரி வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம், 3:30 மணியளவில் மேல்மருவத்துாரில் வைக்கோல் வாங்கி, அதை விற்க சென்றுள்ளார். வேப்பனஹள்ளி அடுத்த நாடுவனப்பள்ளி சவுடேஸ்வரி அம்மன் கோவில் அருகே அப்பகுதியில் இருந்த மின்கம்பியில் உரசியதில் லாரியில் இருந்த வைக்கோல் தீப்
பிடித்தது. லாரியிலிருந்து குதித்த வேடியப்பன் அருகில் இருந்தவர்கள் உதவியுடன், தீயை அணைக்க முயன்றுள்ளார். அதற்குள் தீ மளமளவென பரவி, லாரியும் தீப்பிடித்தது. கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் செல்வதற்குள், லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.