/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விநாயகர் சிலைகளை வைப்பவர்களே பாதுகாப்பு மேற்கொள்ள வலியுறுத்தல்
/
விநாயகர் சிலைகளை வைப்பவர்களே பாதுகாப்பு மேற்கொள்ள வலியுறுத்தல்
விநாயகர் சிலைகளை வைப்பவர்களே பாதுகாப்பு மேற்கொள்ள வலியுறுத்தல்
விநாயகர் சிலைகளை வைப்பவர்களே பாதுகாப்பு மேற்கொள்ள வலியுறுத்தல்
ADDED : ஆக 22, 2025 01:59 AM
பர்கூர், பர்கூர், கந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வரும், 27ல், விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் வைப்பது, பாதுகாப்பது மற்றும் சிலைகள் கரைக்கும் நாளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். அவர் சிலை அமைப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் பேசுகையில், “சிலைகளை அமைக்கும் முன், முறையான அனுமதி பெற வேண்டும். களிமண்ணால் ஆன சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். ரசாயன கலவையால் தயாரித்த சிலைகளை வைக்கக்கூடாது. விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் அவரவர்களே சிலைகளை பாதுகாக்க, கமிட்டி அமைத்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மிக எளிதில் தீப்பற்றக்கூடிய வகையிலுள்ள எந்த பொருளையும் சிலையின் அருகே வைக்கக்கூடாது.
ஊர்வலங்கள், கரைக்கும் நேரங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் நடக்க வேண்டும். இந்த விதிமுறைகளை அனைவரும் ஒன்றிணைந்து நடத்த வேண்டும். இரவில் சிலை வைத்துள்ள இடத்தில் சிலை அமைப்பு நிர்வாகிகள் குறைந்தது ஐந்து நபர்கள் தங்க வேண்டும். அதேபோல் கண்காணிப்பு கேமரா கண்டிப்பாக வைக்க வேண்டும்.
இதில், பர்கூர் இன்ஸ்பெக்டர் இளவரசன், எஸ்.ஐ.,க்கள் அமர்நாத், சிவகுமார், பிரபாகரன், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.