/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் பலி
/
சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் பலி
ADDED : நவ 28, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, ந
கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த வாலிபர் பாபு, 30. இவர் கடந்த, 25ம் தேதி நள்ளிரவில் கே.டி.எம்., டியூக் பைக்கில் சென்றுள்ளார்.
ஓசூர் அகர்வால் கண்மருத்துவமனை மேம்பாலம் அருகில், பெங்களூரு - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை சென்டர் மீடியனில் மோதி துாக்கி வீசப்பட்டதில், எதிர்ப்புறம் வந்த லாரியில் பைக் மோதியது. இதில், படுகாயம் அடைந்த பாபு சம்பவ இடத்திலேயே பலியானார். லாரியை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த ராஜேந்திரன், 59, என்பவர் படுகாயங்களுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

