/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில்1,096 மனுக்களுக்கு உடனடி தீர்வு
/
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில்1,096 மனுக்களுக்கு உடனடி தீர்வு
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில்1,096 மனுக்களுக்கு உடனடி தீர்வு
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில்1,096 மனுக்களுக்கு உடனடி தீர்வு
ADDED : பிப் 13, 2025 01:33 AM
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில்1,096 மனுக்களுக்கு உடனடி தீர்வு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சுற்றுவட்டாரத்தில் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' 3ம் கட்ட திட்ட முகாமில், 1,096 மனுக்களுக்கு உடனடி தீர்வு
காணப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' 3ம் கட்ட திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் நகர பகுதிகளில், 43 முகாம்கள் மற்றும் ஊரக பகுதிகளில், 96 முகாம்கள் என மொத்தம், 139 முகாம்கள், 2 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. தற்போது, இத்திட்டம், 3ம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையிலுள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கும் பஞ்.,களில் நடத்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி பர்கூர் வட்டத்திற்கு உட்பட்ட குட்டூர் பஞ்., ஆம்பள்ளி, பட்லப்பள்ளி பஞ்., தீர்த்தகிரிப்பட்டி, வள்ளுவர் புரம், சக்கில்நத்தம், ஜெகதேவி உள்ளிட்ட பகுதிகளில் முகாம் நடந்தது.
இதை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்து பேசியதாவது: மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று, 15 துறைகளின் அலுவலர்களுடன் சென்று, மக்களின் குறைகளை, 30 நாட்களுக்குள் தீர்த்து வைக்க, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை, தமிழக முதல்வர் அறிவித்தார்.
இதில், தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்கள், சிறு வணிகம் செய்வோர், மகளிர் குழுக்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்பெறுகின்றனர். அதிகளவில் பட்டா, நிலப்பிரச்னையே வருகிறது. இதை தவிர பல்வேறு உதவிகள், அரசு சலுகைகள், அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் வரை கடன்கள், மானியம் கிடைக்கிறது. அதேபோல முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை அனைவரும் வாங்கி வைத்து கொள்ள வேண்டும். வழிப்பிரச்னை, ஆக்கிரமிப்பு புகார்கள் முறையாக விசாரித்து, உண்மை இருக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் பார்க்கக்கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளது. மனு அளித்தவர்களில், 1,096 பேருக்கு இன்றைய தினமே தீர்வு காணப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ஓரிரு வாரங்களில் தீர்வு காணப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, 961 பேருக்கு, 2.56 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் பொருட்கள், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள், பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.