/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிவராமன் இறப்பில் உண்மை தெரிய கலெக்டரிடம் பா.ஜ., செயலர் மனு
/
சிவராமன் இறப்பில் உண்மை தெரிய கலெக்டரிடம் பா.ஜ., செயலர் மனு
சிவராமன் இறப்பில் உண்மை தெரிய கலெக்டரிடம் பா.ஜ., செயலர் மனு
சிவராமன் இறப்பில் உண்மை தெரிய கலெக்டரிடம் பா.ஜ., செயலர் மனு
ADDED : ஆக 24, 2024 07:30 AM
கிருஷ்ணகிரி: போலி என்.சி.சி., பயிற்சியாளர் சிவராமன் இறப்பில், உண்மை தெரிய வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ., மாநில செயலர் வெங்கடேசன் தலைமையில், பா.ஜ.,வினர் கிருஷ்ணகிரி கலெக்டர் சரயுவிடம் நேற்று மனு அளித்தனர்.
அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி., முகாம் நடத்தி மாணவியர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதில், பல மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்க சென்றபோது, பெரிதுபடுத்தாதீர்கள் எனக்கூறி, சமாதானப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில், போலி என்.சி.சி., பயிற்சியாளர் சிவராமன் கைது செய்யப்பட்ட நிலையில், எலி மருந்து சாப்பிட்டு இறந்தார் என போலீசார் கூறுகின்றனர். இவரது இறப்பில் உண்மை தெரிய வேண்டும். யாரையோ காப்பாற்றுவதற்காக, திட்டமிட்டு இது நடத்தப்பட்டதா என்பது தெரிய வேண்டும். பொறுப்பில்லாமல் நடந்த தனியார் பள்ளியை அரசே எடுத்து நடத்த வேண்டும். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட யாரும் தப்பிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, கலெக்டரிடமும் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு கூறினார்.

