/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுற்றித்திரியும் 2 யானைகளால் பயிர்கள் நாசம்
/
சுற்றித்திரியும் 2 யானைகளால் பயிர்கள் நாசம்
ADDED : பிப் 25, 2025 06:50 AM
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே சுற்றித்திரியும், 2 யானைகள், அப்பகு-தியிலுள்ள விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த கொங்கனப்-பள்ளி வனப்பகுதியில், கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக, 2 யானைகள் முகாமிட்டுள்ளன. இவை வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து நெல், வாழை, மா, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று அதிகாலை கொங்கனப்பள்ளி மற்றும் தோட்டகணவாய் கிராமத்தில் புகுந்த யானைகள், அங்குள்ள வெங்கடேசப்பா, சத்தி-யப்பா ஆகியோர் நிலங்களில் உள்ள நெல் மற்றும் வாழை செடி-களை நாசப்படுத்தின.
யானைகளால் கடந்த, 15 நாட்களில், 200 ஏக்கர் நிலங்களில் பயிர்கள் நாசமாகி உள்ளதால், வனத்துறையினர் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

