/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆனைக்கல் நகராட்சி கவுன்சிலர் கொலையில் ரவுடியை சுட்டு பிடித்த கர்நாடகா போலீசார்

ADDED : ஆக 01, 2024 01:49 AM
ஓசூர்: ஆனைக்கல் நகராட்சி கவுன்சிலர் கொலையில், ரவுடியின் காலில் துப்பாக்கியால் சுட்டு, அவரை போலீசார் பிடித்தனர்.
கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் நகராட்சியில், 22 வது வார்டு, காங்., கட்சி கவுன்சிலராக இருந்தவர் ரவி, 30; கடந்த, 24 ல், அவரது அலுவலகத்தில் வைத்து, மர்ம கும்பல் வெட்டி கொன்றது.
ஆனைக்கல் போலீசார் விசாரணையில், கொலை, கொள்ளை உட்-பட, 16 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கார்த்திக், 30, என்பவருக்கு, இக் கொலையில் தொடர்பு இருப்-பது தெரிந்து, அவரை தேடி வந்தனர். கனகபுரா அருகே மைசூரம்-மன தொட்டி பகுதியில், புதிதாக கட்டப்படும் கட்டடத்தில், ரவுடி கார்த்திக் இருப்பது தெரிந்தது.
நேற்று அங்கு சென்ற போலீசார், அவரை சரணடைய பலமுறை எச்சரித்தனர். ஆனால் அவர், போலீஸ்காரர் சுரேஷ் என்பவரை கத்தியால் தாக்கி விட்டு தப்பியோட முயன்றார்.
இதனால் இருமுறை வானத்தை நோக்கி போலீசார் சுட்டனர். அப்படியும், கார்த்திக் சரணடையாமல் இருந்ததால், இன்ஸ்-பெக்டர் திப்பேசுவாமி மற்றும் போலீசார், ரவுடி கார்த்திக்கை வலது காலில் சுட்டு பிடித்தனர்.
இந்த வழக்கில், வினய், ஹரிஷ் ஆகியோர், நீதிமன்றத்தில் சரண-டைந்துள்ளார். மேலும் சிலரை, போலீசார் தேடி வருகின்றனர்.