/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநகராட்சி பகுதியில் 5,000 வீடுகளுக்கு பட்டா ஓசூரில் புறம்போக்கு நிலங்களை தேடும் மக்கள்
/
மாநகராட்சி பகுதியில் 5,000 வீடுகளுக்கு பட்டா ஓசூரில் புறம்போக்கு நிலங்களை தேடும் மக்கள்
மாநகராட்சி பகுதியில் 5,000 வீடுகளுக்கு பட்டா ஓசூரில் புறம்போக்கு நிலங்களை தேடும் மக்கள்
மாநகராட்சி பகுதியில் 5,000 வீடுகளுக்கு பட்டா ஓசூரில் புறம்போக்கு நிலங்களை தேடும் மக்கள்
ADDED : மார் 02, 2025 07:01 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி பகுதியில், 5,000 வீடுகளுக்கு பட்டா வழங்க, தி.மு.க., அரசு தயாராகி வரும் நிலையில், ஆளுங்கட்சி பிரமு-கர்கள் உதவியுடன், அரசு புறம்போக்கு நிலங்களை மக்கள் தேடு-கின்றனர்.
தமிழக எல்லையில் உள்ள, ஓசூர் நகரம் தொழிற்சாலைகளால் வளர்ச்சி பெற்றுள்ளது. அதனால், கர்நாடகா மாநிலம், பெங்களூ-ருக்கு இணையாக, ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தின் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்துள்ளது. ஒரு சென்ட் நிலத்தை கூட ஏழை, எளிய மக்களால் வாங்க முடியாத நிலை உள்ளது.
அதனால் வீடற்ற ஏழை, எளிய மக்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிக்கின்றனர். குறிப்பாக, ஓசூர் மாநகராட்-சிக்கு உட்பட்ட பார்வதி நகர், ராம்நகர், தேசிங்கு நகர், சானசந்-திரம், மில்லத் நகர், சீத்தாராம்மேடு உட்பட பல்வேறு பகுதி-களில், அரசு புறம்போக்கு நிலங்களில், நுாற்றுக்கணக்கான குடும்-பங்கள் பலதலைமுறைகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.ஓசூர் நகர் பகுதியில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு இரண்டே முக்கால் சென்ட் இலவச வீட்டுமனை பட்டாவை தாசில்தார் வழங்க வேண்டும் என்றால், அதன் மதிப்பு, 30,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும். 1 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், சப்-க-லெக்டர் பட்டா வழங்கலாம். 2 லட்சம் ரூபாய் வரை இருந்தால், மாவட்ட கலெக்டர் பட்டா வழங்க முடியும். அதற்கு மேல் நிலத்தின் மதிப்பு இருந்தால், தமிழக அரசு முடிவு செய்தால் மட்-டுமே பட்டா வழங்க முடியும்.
பட்டா கேட்டு மனுஓசூர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களின் மதிப்பு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் சென்று விடுகிறது. அதனால்தான் கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சி எல்லையில் இருந்து, 16 கி.மீ., சுற்றளவிற்கு பட்டா வழங்க வேண்டாம் என, அரசு உத்தரவிட்டிருந்தது.எனவே தான், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி மற்றும் தாலுகா எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு, வருவாய்த்துறையால் பட்டா வழங்க முடியவில்லை. ஆனால், மக்கள் தொடர்ந்து வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகின்-றனர்.
விதிகளின்படி பட்டா
இந்நிலையில், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும், 5,000 குடும்பங் களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசிக்க வேண்டும். வீடற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற விதிகளின்படி ஆய்வு செய்து, பட்டா வழங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால், அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி, வாடகைக்கு விட்டுள்ள வசதி படைத்தவர்கள் பலர், இதன் மூலம் பயனடைய வாய்ப்புள்ளது. அவர்களுக்கு ஆளுங்கட்சி மற்றும் அரசியல் செல்வாக்கு உள்-ளதால், பட்டா வாங்கி விடலாம் என, கணக்கு போட்டு வைத்-துள்ளனர்.இதுமட்டுமின்றி, மாநகராட்சிக்குள் ஒரு சென்ட் நிலம் வாங்க வேண்டும் என்றால் அதன் மதிப்பு, 10 லட்சத்திற்கும் மேலாகும்.அதனால், வீடில்லாமல் வாடகை வீட்டில் குடியிருக்கும் மக்கள், ஆளுங்கட்சியினர் ஆதரவுடன், அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து வீடு கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.மாநகராட்சி பகுதிக்குள் பட்டா வழங்க போவதாக வந்த தக-வலால், கடந்த ஒரே வாரத்தில் மட்டும் வீட்டுமனை பட்டா கேட்டு, ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில், 938 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அடுக்குமாடி குடியிருப்பில் 336 வீடுகள்ஓசூர் அருகே புனுகன்தொட்டி கிராமத்தில், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், 38.30 கோடி ரூபாய் மதிப்பில், 336 வீடுகள் கொண்ட, மூன்று தளங்களுடன் கூடிய, ஆறு அடுக்கு-மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு வீடும், 400 சதுர அடி பரப்பளவில், ஒரு ஹால், படுக்-கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை வசதியுடன் கட்டப்படுகிறது. இது வீடற்ற ஏழை, எளிய மக்க-ளுக்கு வழங்கப்பட உள்ளது. ஆனால், இந்த வீடுகளை பெற, 3.95 லட்சம் ரூபாய் வரை மக்கள் செலுத்த வேண்டி வரும். அப்-படி இருந்தும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே, அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு பெற, பலர் மனுக்களை வழங்கி உள்-ளனர். தற்போது இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட இருப்-பதாக தகவல் பரவியதால், அதை பெறவே மக்கள் விரும்புகின்-றனர்.