/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை
/
அரசு பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை
ADDED : ஆக 20, 2024 02:41 AM
கிருஷ்ணகிரி: சூளகிரி அடுத்த பெரியகுத்தி, கொமலகொண்ட கொத்துார், ராமன்தொட்டியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில், பஸ் வசதி கோரி மனு அளிக்க வந்தனர்.
மனு குறித்து, அவர்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியில், 140க்கும் மேற்பட்ட மாணவர்கள், முதுகுறுக்கி, பேரிகை பள்ளிகளுக்கு செல்கின்றனர். இப்பகுதிகளுக்கு ஒரே பஸ் மட்டுமே வருகிறது. ஏற்கனவே, பஸ்சில் கூட்டம் இருப்பதால், மாணவர்கள் பஸ்சில் ஏற முடிவதில்லை. எங்களுக்கு மேலும் ஒரு பஸ் இயக்குமாறு, மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த மாதம், 16ல் பஸ் வசதி கோரி ராமன்தொட்டியில் போராட்டமும் நடத்தினோம். சூளகிரிக்கு செல்லும், டி12 பஸ் எங்களுக்காக விடப்பட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தவறான தகவலை தந்துள்ளனர். எங்கள் பகுதி மாணவர்கள் முதுகுறுக்கி, பேரிகை செல்லும் வகையில், புதிய பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.