/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா?

ADDED : செப் 04, 2024 09:58 AM
ஓசூர்: ராயக்கோட்டையில், சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், மக்கள் தவித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட் டம், ராயக்கோட்டை பாஞ்-சாலி நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு மக்களுக்கு தேவையான சாலை, கழிவு நீர் கால்வாய் போன்ற எந்த அடிப்-படை வசதிகளும் முறையாக இல்லை. குழாய் உடைப்பால், ஆண்டுக்கணக்கில் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், தொற்று நோய் பரவும் அபாயத்தில் மக்கள் உள்ளனர்.
சாலை வசதி இல்லாததால், காஸ் வாகனம், ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்ற எந்த வாகனங்-களும் இப்பகுதிக்கு வர முடிவதில்லை. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ள-வில்லை. ஓட்டு கேட்க வரும் அரசியல் கட்சியி-னரும், வெற்றி பெற்ற பின், எந்த வசதிகளும் செய்து கொடுப்பதில்லை. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.மாவட்ட நிர்வாகம் நேரடியாக பாஞ்சாலி நகரில் ஆய்வு செய்து, மக்களுக்கு தேவையான அடிப்-படை வசதிகளை செய்து கொடுக்கா விடில், போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, மக்கள் தெரிவிக்கின்றனர்.