ADDED : ஏப் 17, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கத்தின்
மகளிர் அணி சார்பில், கர்ப்பிணிகளின் நலன் காக்க விழிப்புணர்வு
நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை
மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி, மருத்துவர்கள் வினுத்தா பாஸ்கரன்,
சித்ரா பாலசுப்பிரமணியன் ஆகியோர், 50 க்கும் மேற்பட்ட
கர்ப்பிணிகளுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

