/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாடுகள் திருடிய இருவருக்கு 'காப்பு'
/
மாடுகள் திருடிய இருவருக்கு 'காப்பு'
ADDED : நவ 17, 2024 02:23 AM
தேன்கனிக்கோட்டை, நவ. 17-
தேன்கனிக்கோட்டை அருகே அரசகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத், 42. தனியார் பள்ளியில் தலைமையாசிரியராக உள்ளார்; இவர் தேன்கனிக்கோட்டை ஏ.வி.எஸ்., லே அவுட்டில் கொட்டகை அமைத்து, மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த மாதம், 5 இரவு, 9:00 மணிக்கு, மாடுகளை கொட்டகையில் கட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அடுத்த நாள் காலையில் சென்று பார்த்த போது, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 5 மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், தேன்கனிக்கோட்டை அருகே கொல்லப்பள்ளியை சேர்ந்த மஞ்சுநாத்ரெட்டி, 27, கர்நாடகா மாநிலம், கனகபுரா அடுத்த கட்டிகுண்டா பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், 24, ஆகியோர் மாடுகளை திருடியது தெரிந்தது. இருவரையும் நேற்று
முன்தினம், போலீசார் கைது செய்தனர்.

