/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம்
/
கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : டிச 22, 2024 12:59 AM
கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம்
ஓசூர், டிச. 22-
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், நாகமங்கலம், ஊடேதுர்க்கம், திம்ஜேப்பள்ளி ஆகிய பஞ்., உட்பட்ட, 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, நாகமங்கலம் கிராம சேவை கட்டடத்தில், பஞ்., தலைவர் கோவிந்தசாமி தலைமையில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது. தேன்கனிக்கோட்டை தாசில்தார் கோகுல்நாத், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன மேலாளர் சாதிக்பாஷா, பால் உற்பத்தி நிறுவன மேலாளர் ராமநாதன் ஆகியோர், பெண்கள் சமூகத்தில் முன்னேற தேவையான ஆலோசனைகளை வழங்கி, பெண் பால் உற்பத்தியாளர்கள், 313 பேருக்கு, 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் கேன்களை வழங்கினர். பெண்களுக்கு சமூக உறவுக்கான முன் முயற்சிகள் மற்றும் நிதி மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஊடேதுர்க்கம் பஞ்., தலைவி பாக்கியலட்சுமி சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.