/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேசிய நெடுஞ்சாலையில்கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
/
தேசிய நெடுஞ்சாலையில்கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
ADDED : ஜன 10, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய நெடுஞ்சாலையில்கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
கிருஷ்ணகிரி, : ஓசூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று ஒரு கன்டெய்னர் லாரி வந்துள்ளது. குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில் ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. பின்னால் வந்த ஒரு லாரியும் திடீரென கவிழ்ந்து கன்டெய்னர் லாரி மீது மோதி நின்றது. இதில், கன்டெய்னர் லாரி டிரைவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. குருபரப்பள்ளி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் கவிழ்ந்த கன்டெய்னரை பொக்லைன் உதவியோடு அகற்றினர். இந்த விபத்தால் ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.