/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொங்கலை முன்னிட்டு கோவில்களில் பூஜை
/
பொங்கலை முன்னிட்டு கோவில்களில் பூஜை
ADDED : ஜன 15, 2025 12:42 AM
தர்மபுரி, :
பொங்கல் பண்டிகையையொட்டி, தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர், நேற்று முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக, பால், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபி ேஷகம் நடந்தது. இதேபோல், தர்மபுரி நெசவாளர்காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்திள்ள நந்தி மற்றும் மூலவருக்கு அபி ேஷகம் செய்யப்பட்டது.
தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கோரி சிவசக்தி சித்தர் பீடம் கோவில், எஸ்.வி.,ரோடு ஆதிசிவன் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், அதியமான்கோட்டை சேளேஸ்வரரர், சேமேஸ்வரர் கோவில், மேல்பூரிக்கல் தியானேஸ்வரர்கோவில், தொப்பூர் ஞானலிங்கேஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலைக்கோவில் அருனேஷ்வரர் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, கோபிநாதம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஸ்டேஷன் வளாகத்தில், வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன், போலீசார் புதுப்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
* தர்மபுரி மாவட்டம், அரூர் போலீஸ் சப்- டிவிஷனில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி கடத்துார், ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில், நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஸ்டேஷன் வளாகத்தில் வண்ண கோலமிட்டு கரும்புகள் கட்டப்பட்டிருந்தது. பாரம்பரிய உடைகள் அணிந்து, போலீசார் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். பின் உணவு பரிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். விழாவில் இன்ஸ்பெக்டர்கள் வான்மதி, சுகுமார், எஸ்.ஐ.,க்கள் கெய்க்வாட், விக்னேஷ், மாரப்பன், ஞானப்பிரகாசம் உள்ளிட்ட போலீசார் கலந்து
கொண்டனர்.