/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி
/
தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி
ADDED : ஜன 24, 2025 01:40 AM
தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லுாரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அனுராதா தலைமை வகித்து, கண்காட்சி, கருத்
தரங்கை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி பேசினார்.
மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்னாபாலமுருகன், சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்தும், பயிற்சி உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) பாரதிவிஜயலட்சுமி போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வது குறித்தும், தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும் பேசினர். பின்னர், மாவட்ட திறன் பயிற்சி மைய உதவி இயக்குனர்
பன்னீர்செல்வம் பேசினார்.கண்காட்சி, கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவியர், கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள், புத்தகங்களை பார்வையிட்டனர்.

