/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., பூத் கமிட்டிநிர்வாகிகள் கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டிநிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஜன 31, 2025 01:10 AM
அ.தி.மு.க., பூத் கமிட்டிநிர்வாகிகள் கூட்டம்
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை டவுன் பஞ்., 13வது வார்டு இந்திரா நகரில், அ.தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் ஆகியோர் பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூறினர்.
இதில், மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது, வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு வேங்கன், மத்திய ஒன்றிய செயலாளர் சாமிநாதன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் இளையராஜா, சுப்பிரமணி, பழனியப்பன் மற்றும் அ.தி.மு.க., ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.