/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊத்தங்கரை கடைகளில் தொடர் திருட்டு
/
ஊத்தங்கரை கடைகளில் தொடர் திருட்டு
ADDED : பிப் 02, 2025 01:21 AM
ஊத்தங்கரை கடைகளில் தொடர் திருட்டு
ஊத்தங்கரை: ஊத்தங்கரையின் பல்வேறு பகுதி கடைகளில், சில நாட்களாகவே மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, 2 நாட்களுக்கு முன், ஊத்தங்கரை - சேலம் மெயின்ரோடு, எல்.ஐ.சி., அலுவலகம் எதிரே உள்ள காய்கறி கடையில் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து கல்லா பெட்டியில் இருந்த, 15,000 ரூபாய், அருகிலிருந்த கடையில் பீடி, சிகரெட், ஐஸ்கிரிம் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி செல்லும், 'சிசிடிவி' காட்சி வைரலானது. இதனால், கடை உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது, ஒரு கடையில், 3 நபர்கள் திருடி செல்லும், 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில், 2 பேர் சிறுவர்கள் என தெரிகிறது. தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை விரைவில் கைது செய்ய, கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.