ADDED : மார் 04, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் விபத்தில் விவசாயி பலி
ஓசூர்:ராயக்கோட்டை அருகே உள்ள கருக்கனஹள்ளியை சேர்ந்தவர் மாதன், 55, விவசாயி. இவரும் கோவிந்தராஜ், 36 என்பவரும் கடந்த, 1ல், ஸ்பிளண்டர் பைக்கில் கருக்கனஹள்ளி பஸ் ஸ்டாப் அருகில் ராயக்கோட்டை - ஓசூர் சாலையில் சென்றுள்ளனர். அப்போது எதிரில் வேகமாக வந்த பென்லி பைக் மீது மோதினர். இதில், படுகாயமடைந்த மாதன் பலியானார். கோவிந்தராஜ் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.