/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம்
/
அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம்
ADDED : மார் 08, 2025 01:46 AM
அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம்
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., பகுதிகளில், மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், திண்ணை பிரசாரம் நேற்று நடந்தது.
ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ராமன் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, திண்ணை பிரசாரத்தை துவக்கி வைத்து, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., ஆட்சி காலத்தில் மக்களுக்கு செய்யப்பட்ட திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்த துண்டு பிரசுரங்களை கடை வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
தேன்கனிக்கோட்டை நகர செயலாளர் ஜெயராமன், டவுன் பஞ்., முன்னாள் தலைவர் நாகேஷ், முன்னாள் கவுன்சிலர் பழனி, கெலமங்கலம் நகர செயலாளர் மஞ்சுநாத் உட்பட பலர்
பங்கேற்றனர்.