/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இரவில் நெடுஞ்சாலையை கடந்த யானைகளால் பீதி
/
இரவில் நெடுஞ்சாலையை கடந்த யானைகளால் பீதி
ADDED : மார் 16, 2025 02:13 AM
இரவில் நெடுஞ்சாலையை கடந்த யானைகளால் பீதி
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனுார், பேவநத்தம் வனப்பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. பெரும்பாலானவை தனித்தனியாக உள்ளதால், அவற்றை விரட்டுவது வனத்துறைக்கு சிரமமாக உள்ளது. அடிக்கடி வனத்தை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு, நொகனுார் வனத்திலிருந்து, 'கிரி' என்ற ஒற்றை யானை உட்பட மொத்தம், 3 யானைகள், மரக்கட்டா கிராமம் அருகே, தேன்கனிக்கோட்டையிலிருந்து அஞ்செட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையை கடந்து, சிக்கேபுரம் வனப்பகுதிக்கு சென்றன. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பீதியில் வாகனங்களை நிறுத்தி, யானைகள் சாலையை கடந்த பின் புறப்பட்டு சென்றனர். யானைகளால் விவசாய பயிர்கள் சேதமாகி வருவதால், அவற்றை கர்நாடகா மாநில வனத்திற்குள் அல்லது அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.