/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மருத்துவ தொழில் சார்ந்தஆங்கில தேர்வுக்கான பயிற்சி
/
மருத்துவ தொழில் சார்ந்தஆங்கில தேர்வுக்கான பயிற்சி
ADDED : மார் 20, 2025 01:26 AM
மருத்துவ தொழில் சார்ந்தஆங்கில தேர்வுக்கான பயிற்சி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சிக்கு பி.எஸ்சி., எம்.எஸ்சி., நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பொது செவிலியர் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்ற, 21 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டிற்கு, 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு இரண்டு மாதம். விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும். இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.