/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஹிந்து சமய அறநிலையத்துறைஆய்வாளர் அலுவலகம் திறப்பு
/
ஹிந்து சமய அறநிலையத்துறைஆய்வாளர் அலுவலகம் திறப்பு
ADDED : ஏப் 06, 2025 01:02 AM
ஹிந்து சமய அறநிலையத்துறைஆய்வாளர் அலுவலகம் திறப்பு
ஓசூர்:ஓசூர், பஸ் ஸ்டாண்ட் அருகே ஜி.ஆர்.டி., பின்புறம், காளிகாம்பாள் சமேத கமடேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் ஓசூர் சரக ஆய்வாளர் அலுவலகம் புதிதாக கட்டப்படும் என, 2022 - 23ம் ஆண்டு சட்டசபையில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி புதிய அலுவலகம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், கிருஷ்ணகிரி ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமுவேல், மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர், அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினர். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் விஜயகுமார், சரக ஆய்வாளர்கள் சக்தி, வேல்ராஜ், அருள்மணி, ராமமூர்த்தி, அண்ணாதுரை, செயல் அலுவலர்கள் சின்னசாமி, சாமிதுரை, சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.