/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முத்து மாரியம்மன் கோவில்மஹா கும்பாபிேஷக விழா
/
முத்து மாரியம்மன் கோவில்மஹா கும்பாபிேஷக விழா
ADDED : ஏப் 08, 2025 01:55 AM
முத்து மாரியம்மன் கோவில்மஹா கும்பாபிேஷக விழா
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி பழையபேட்டை அருந்ததி மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, புண்ணியாதானம், கணபதி பூஜை, வாஸ்து பூஜை,
கங்கணம் கட்டுதல், கோ பூஜை ஆகியவை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், துர்கா ஹோமம், ருத்ர ஹோமம், வேதபாராயணம், நாடி சந்தானம்,
பூர்ணாஹுதியும், இரவு, 7:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு, தம்பதி பூஜை, கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், துர்கா ஹோமம், மாரியம்மன் மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. காலை, 7:30 மணிக்கு, புனித நீர் கலசத்தை கோவிலைச் சுற்றி வலம் வந்து, முத்து மாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.