/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காங்., சார்பில் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி
/
காங்., சார்பில் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஏப் 12, 2025 01:40 AM
காங்., சார்பில் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி
கிருஷ்ணகிரி:வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தடத்தரை கிராமத்தில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, வேப்பனஹள்ளி தொகுதி காங்., பொறுப்பாளர் திம்மப்பா தலைமையில், சிறப்பு பூஜை நடந்தது. இதில் அபிேஷகம், ஆராதனை மற்றும் தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் துாய்மை பணியாளர்களை பாராட்டி, 300 துாய்மை பணியாளர்களுக்கு வேட்டி, புடவை மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கினார்.
வட்டார காங்., தலைவர் முருகன், முன்னாள் இளைஞர் காங்., மாவட்ட தலைவர் முனிராஜ், துணைத் தலைவர் வாசு, நிர்வாகிகள் பிரேம்குமார், நாகப்பா, ராமண்ணன், முன்னாள் ராணுவ வீரர் பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

