/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் கன மழை
/
கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் கன மழை
ADDED : ஏப் 12, 2025 01:41 AM
கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் கன மழை
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில், நேற்று மதியம் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மார்ச் மாத இறுதி முதலே கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது. கடும் வெயிலால், மதிய வேளையில் சாலைகளில் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த, மூன்று நாட்களாக காலையில் கடுமையான வெயில் அடித்தாலும், மதியத்திற்கு மேல், அரை மணி நேரம் மழை பெய்து வந்தது.
இதற்கிடையில், நேற்று காலை வெயில் சுட்டெரித்த போதும் மதியம், 3:00 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், குந்தாரப்பள்ளி, வேப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில், 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையில் பர்கூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் இருந்த பயணிகள் நிழற்கூடம் இடிந்து விழுந்தது. காவேரிப்பட்டணம், தாம்சன்பேட்டையில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் மீது, அருகிலிருந்த வேப்ப மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. மாவட்டத்தில் பரவலாக, 1 மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால், குளிர்ந்த காற்று வீசியதால் கோடை வெப்பம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

