/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க., சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 12, 2025 01:43 AM
அ.தி.மு.க., சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, நடுமலை பழனிஆண்டவர் கோவிலில் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை, நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி துாயமணி மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பழனிஆண்டவர் கோவிலில் கலை அரங்கம் கட்ட, தனது எம்.பி., நிதியில், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கினார். பின்னர், அரசம்பட்டி பஸ் ஸ்டாண்டில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு டிபன் பாக்ஸ், புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயபால், துாயமணி, சிவலிங்கம், அரசம்பட்டி தென்னை விவசாய சங்க தலைவர் கென்னடி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

