/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இந்து முன்னணியினர் 10 பேர் கைது ஸ்டேஷனை முற்றுகையிட்ட நிர்வாகிகள்
/
இந்து முன்னணியினர் 10 பேர் கைது ஸ்டேஷனை முற்றுகையிட்ட நிர்வாகிகள்
இந்து முன்னணியினர் 10 பேர் கைது ஸ்டேஷனை முற்றுகையிட்ட நிர்வாகிகள்
இந்து முன்னணியினர் 10 பேர் கைது ஸ்டேஷனை முற்றுகையிட்ட நிர்வாகிகள்
ADDED : பிப் 02, 2025 01:20 AM
இந்து முன்னணியினர் 10 பேர் கைது ஸ்டேஷனை முற்றுகையிட்ட நிர்வாகிகள்
ஓசூர்,: தேன்கனிக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு, இந்து முன்னணி மாவட்ட செயலாளரான தேன்கனிக்கோட்டையை சேர்ந்த கார்த்திக், 29, மற்றும் ஹரிஸ், 29, சேஷாத்திரி, 19, வசந்தகுமார், 20, ஜெயக்குமார், 23, பவன்குமார், 22, சதீஷ், 29, பிரபு, 19, ரவிக்குமார், 31, யஷ்வந்த்குமார், 28, உள்ளிட்ட, 10 பேர், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக வரும், 4ல் அறப்போராட்டம் நடக்க இருப்பதாக கூறி, இந்து முன்னணியின் போஸ்டர்களை ஒட்டினர். இதை அவ்வழியாக ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் பார்த்து, மத உணர்வை துாண்டும் வகையில், போஸ்டரில் வாசகம் இருந்ததாக கூறி, 10 பேரையும் கைது செய்து, தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
இதையறிந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜ் உட்பட, 100க்கும் மேற்பட்டோர், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டனர். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், 10 பேரும் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும், 13 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.