/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2 பேர் கைது
/
புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2 பேர் கைது
ADDED : ஆக 08, 2024 05:43 AM
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, கந்திகுப்பம் போலீசார், கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் குருவிநாயனப்பள்ளி பழைய சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்-வழியாக வந்த காரை நிறுத்த முயன்றபோது, கார் நிற்காமல் வேக-மாக சென்று, அந்த வழியாக சென்ற லாரி மீது மோதியது. விபத்-துக்குள்ளான காரை போலீசார் சோதனை செய்தபோது அதில், 220 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்-தன. அதன் மதிப்பு, 1.38 லட்சம் ரூபாய். புகையிலை பொருட்க-ளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாராயண்சிங், 25, பன்சிங், 32, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.