/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஐகோர்ட் ஆணைப்படி ஜெகதாப்பிலுள்ள 26 வீடுகளின் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றம்
/
ஐகோர்ட் ஆணைப்படி ஜெகதாப்பிலுள்ள 26 வீடுகளின் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றம்
ஐகோர்ட் ஆணைப்படி ஜெகதாப்பிலுள்ள 26 வீடுகளின் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றம்
ஐகோர்ட் ஆணைப்படி ஜெகதாப்பிலுள்ள 26 வீடுகளின் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றம்
ADDED : ஜன 29, 2025 01:07 AM
கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப் பகுதியில், 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்
பகுதியினர் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையின் நத்தம் பகுதி நிலங்களை ஆக்கிரமித்து, சிலர் வீடுகள் கட்டியுள்ளதாக, அதேபகுதியை சேர்ந்த நாசன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த செப்., மற்றும் டிச., 18ல் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம், எதிர்ப்பு தெரிவித்து அப்
பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவை அவமதிப்பது தவறு, ஆக்கிரமிப்பு பகுதியிலுள்ள உங்கள் உடைமைகளை அகற்றுங்கள் எனக்கூறி ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்றனர்.
நேற்று, கிருஷ்ணகிரி தாசில்தார் வளர்மதி தலைமையிலான வருவாய்துறையினர் முன்னிலையில், ஏற்கனவே அளவீடு செய்ததின் படி ஜெகதாப் பகுதியில் கட்டப்பட்ட, 26 வீடுகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளை, பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க கிருஷ்ணகிரி, டி.எஸ்.பி., முரளி தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீ சார் குவிக்கப்பட்டு பாது
காப்பு பணியில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராமன், காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., சுப்பிரமணி, ஆர்.ஐ., புஷ்பலதா, காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சரவணன், மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.