/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேப்பனஹள்ளி அருகே 3 மாநில எல்லையில்கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைக்க கோரிக்கை
/
வேப்பனஹள்ளி அருகே 3 மாநில எல்லையில்கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைக்க கோரிக்கை
வேப்பனஹள்ளி அருகே 3 மாநில எல்லையில்கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைக்க கோரிக்கை
வேப்பனஹள்ளி அருகே 3 மாநில எல்லையில்கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 19, 2025 02:02 AM
வேப்பனஹள்ளி அருகே 3 மாநில எல்லையில்கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைக்க கோரிக்கை
கிருஷ்ணகிரி:சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் வேப்பனஹள்ளி அருகே, 3 மாநில எல்லையில் கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வேப்பனஹள்ளி பகுதி தமிழகம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய, 3 மாநில எல்லையில் அமைந்துள்ளது. தினமும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வேப்பனஹள்ளி வழியாக தமிழகத்திற்குள் வருகின்றன. குறிப்பாக ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்., ஆகியவற்றிற்கு செல்வோர் இந்த சாலைகளை பயன்படுத்துகிறார்கள்.
ஆந்திர மாநிலம் சித்துார், கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்தும் வேப்பனஹபள்ளி வழியாக ஏராளமான வாகனங்கள் தமிழகத்திற்குள் வருகின்றன. இதில், தமிழக எல்லையில் நேரலகிரி கிராமத்தில், கர்நாடக எல்லையையொட்டி ஒரு சோதனைச்சாவடியும், கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், ஆந்திர மாநில எல்லையையொட்டி அத்திகுண்டா என்ற இடத்தில் ஒரு சோதனைச்சாவடியும் உள்ளது.
இங்கு சோதனைச்சாவடிகள் இருப்பதால், ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர், கர்நாடக மாநில எல்லையான சிங்கிரிப்பள்ளி வழியாகவும், ஆந்திர மாநில எல்லையான அரியனப்பள்ளி வழியாகவும் தமிழகத்திற்குள் நுழைகின்றனர். இதற்கு அவர்களுக்கு, 10 முதல், 15 கி.மீ., துாரம் மட்டுமே அதிகரிக்கிறது. அதாவது சிங்கிரிப்பள்ளி வழியாக வரும் வாகனங்கள் நாச்சிக்குப்பம் வழியாக, தமிழகத்திற்குள் நுழைந்து, கொத்த கிருஷ்ணப்பள்ளி வழியாகவும், அரியனப்பள்ளி வழியாக வரும் வாகனங்கள், ராமச்சந்திரம் ஏரிக்கரை வழியாக குந்தாரப்பள்ளி சாலை மூலமாகவும், புகையிலை பொருட்கள், ரேஷன் பொருட்கள், கர்நாடக மது பாட்டில்கள் கடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
மூன்று மாநில எல்லையில், மலைப்பகுதிகளுக்கு நடுவே இப்பகுதி அமைந்துள்ளது. மற்ற மாநில அரசுகளும், கடத்தல் சம்பவங்கள் நடக்கும் சாலைகளில், சோதனைச்சாவடி மற்றும் போலீசார் கண்காணிப்பு தவற விட்டுள்ளன. எனவே, சிங்கிரிப்பள்ளி, அரியனப்பள்ளி வழியாக, தமிழக எல்லைக்குள், வாகனங்களில், கடத்தல் பொருட்களை தடுக்கும் வகையில், அப்பகுதிகளில் சோதனைச்சாவடி அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.