/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நகை கடைக்காரரைதாக்கிய 3 பேர் கைது
/
நகை கடைக்காரரைதாக்கிய 3 பேர் கைது
ADDED : ஜன 19, 2025 02:01 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் மோகன், 55, அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். தன் உறவினரான சவுந்திரராஜன் என்பவருக்கு பெண் பார்த்து கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்தார். கருத்து வேறுபாடால் தம்பதி பிரிந்து விட்டனர். இந்நிலையில் சவுந்திரராஜன், 2வதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அப்பெண்ணிடம் அவதுாறாக பேசுவதாக கூறி, மோகனிடம் சவுந்திரராஜன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த, 12 இரவு மோகனின் நகைக்கடைக்கு சென்ற சவுந்திரராஜன், 35, அவரது தம்பி ஜெகன், 32, தாய் சபிதா, 65 ஆகியோர் சேர்ந்து, மோகன் அவரது கார் டிரைவர் அஸ்லம் ஆகியோரை தாக்கியுள்ளனர். 'தன் முதல் மனைவியை பிரித்தது போதாதென்று, 2வது மனைவியையும் பிரிக்க பார்க்கிறாயா' எனக்கூறி மோகனை சவுந்திரராஜன் தாக்கியுள்ளார்.
இது குறித்து மோகன், 'சிசிடிவி' காட்சிகளுடன், கிருஷ்ணகிரி டவுன் போலீசில் அளித்த புகார் படி, சவுந்திரராஜன், ஜெகன், சபிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

