/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மதிய உணவு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்
/
மதிய உணவு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்
ADDED : மார் 12, 2025 07:56 AM
ஓசூர்: கெலமங்கலம் அருகே, டி.தம்மண்டரப்பள்ளியில், தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, 700 பேர் ஒப்பந்த தொழி-லாளர்களாக பணியாற்றுகின்றனர். நிறுவனத்தில் வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையில் இருப்பதாக, ஏற்கனவே பலமுறை நிர்-வாகத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
நேற்று மதியம், நிறுவனத்தில் உணவு சாப்பிட்ட மனோஜ், 21, முரளி, 21, சிவா, 20, சுதேஷ், 21, ஆகிய, 4 தொழிலாளர்
களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்-டனர். உணவில் கரப்பான் பூச்சி, புழு கிடந்ததாக தொழிலா-ளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.