/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில்6 மாதமாக வீணாகி வரும் தண்ணீர்
/
காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில்6 மாதமாக வீணாகி வரும் தண்ணீர்
காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில்6 மாதமாக வீணாகி வரும் தண்ணீர்
காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில்6 மாதமாக வீணாகி வரும் தண்ணீர்
ADDED : ஏப் 11, 2025 01:28 AM
காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில்6 மாதமாக வீணாகி வரும் தண்ணீர்
காங்கேயம்:காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில், கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் எடுத்து முத்துார், காங்கேயம், ஊதியூர், குண்டடம் பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கான பிரதான குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்படுவதும், சரி செய்யப்படுவதும் வழக்காமன ஒன்றாக உள்ளது. இந்நிலையில் ஊதியூர் பெட்ரோல் பகுதியிலிருந்து குண்டடம் பகுதிக்கு செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே தண்ணீர் கசிந்து வெளியேறி குட்டைபோல தேங்கி வருகிறது.
கடந்த ஆறு மாத காலமாக இப்படி உள்ளது. வெயில் காலம் துவங்கி தண்ணீர் பிரச்னை தலை துாக்க தொடங்கியுள்ள நேரத்தில் தண்ணீர் கசிந்து வீணாவது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
'