/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டாலும் அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை'
/
'மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டாலும் அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை'
'மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டாலும் அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை'
'மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டாலும் அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை'
ADDED : ஆக 24, 2024 07:30 AM
கிருஷ்ணகிரி: மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டாலும், அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் தலைமையில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் அளித்த பதில்கள்:
மகாராஜன்: ஒட்டு என்ற இடத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பதிலும் அளிப்பதில்லை.
டி.ஆர்.ஓ., சாதனைக்குறள்: சம்பந்தப்பட்ட மனுக்களை தொடர்ந்து கவனியுங்கள். இதுரை, 79 மனுக்களுக்கு அலுவலர்கள் பதில் அளிக்கவில்லை. அடுத்த முறை இந்த புகார் வரக்கூடாது.
மகாராஜன்: மாணவிக்கு கல்விக் கடன் கேட்டால், 60 சதவீதம் மதிப்பெண் இருக்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளனர். இது முன்கூட்டியே தெரிந்திருந்தால், நான் டியூசன் அனுப்பி நன்றாக படிக்க வைத்திருப்பேன். இல்லையென்றால் ஆடு மாடுகளை மேய்க்க அனுப்பியிருப்பேன்.
எல்.டி.எம்., சரவணன்: மேல் அதிகாரிக்கு தெரிவித்து கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நசீர் அகமது: கங்கலேரியில் குரங்கு தொல்லை அதிகரித்துள்ளது. வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. பொதுமக்களை கடிக்கிறது. குரங்குகளை வனத்துறை பிடிக்க வேண்டும்.
வனச்சரக அலுவலர் வெங்கடாஜலம்: குரங்குகளை பிடித்து அடர்ந்த காட்டில் விட்டாலும், மீண்டும் ஊருக்குள் வந்துவிடுகிறது. இருந்தாலும், கூண்டு வைத்து குரங்குகள் பிடிக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

