/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஆக 20, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 488 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 574 கன அடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 400 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. வலது, இடது வாய்க்காலில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.49 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரில் தொழிற்சாலை கழிவுகள் கலந்திருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை ஏற்பட்டது.

