/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விண்ணரசி அன்னை ஆலயத்தில் சர்வதேச மகளிர் தின விழா
/
விண்ணரசி அன்னை ஆலயத்தில் சர்வதேச மகளிர் தின விழா
ADDED : மார் 12, 2025 07:58 AM
கிருஷ்ணகிரி: தர்மபுரி சமூக சேவை சங்கம், காரித்தாஸ் இந்தியா, கோல்பிங் இந்தியா, தமிழக சமூக பணி மையம், தமிழக பெண்கள் கூட்ட-மைப்பு மற்றும் கந்திகுப்பம் துாய விண்ணரசி அன்னை இறை சமூகத்தினர் இணைந்து, செயலை துரிதப்படுத்துங்கள் என்னும் மையக்கருத்தில், சர்வதேச மகளிர் தின விழா, ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் நடந்தது. தர்மபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குனர் அருள்பணி மாரியப்பன் வரவேற்றார். மறைவட்ட முதன்மை குரு இருதயநாதன் மற்றும் கந்திகுப்பம் பங்குத்தந்தை ஆல்பர்ட் வில்லியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கந்திகுப்பம் பஞ்., தலைவர் மகிழரசி ஜெயப்பிரகாஷ், துணைத்த-லைவர் ராஜா, பர்கூர் கவுன்சிலர் கோவிந்தராஜ், பங்கு குழு உபத்-தலைவர் மதலைமுத்து, கிருஷ்ணகிரி வட்டார குருக்கள், அருள் சகோதரிகள் மற்றும் நன்கொடையாளர்கள் கலந்து கொண்டனர். விழாவில், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கோல்பிங் குழு உறுப்பினர்கள், மாவட்ட கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் கந்திகுப்பம் இறைசமூகத்தினர் என, 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.