/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ராயக்கோட்டை ரவுடி கொலையில் உறவினருக்கு ஆயுள் தண்டனை
/
ராயக்கோட்டை ரவுடி கொலையில் உறவினருக்கு ஆயுள் தண்டனை
ராயக்கோட்டை ரவுடி கொலையில் உறவினருக்கு ஆயுள் தண்டனை
ராயக்கோட்டை ரவுடி கொலையில் உறவினருக்கு ஆயுள் தண்டனை
ADDED : மார் 12, 2025 07:58 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, விநாயகர் கோவில் தெருவில் வசித்தவர் வெங்கடேசன், 31; மெக்கானிக்கான இவர் போலீஸ் ரவுடி பட்டியலில் இடம் பெற்றவர். ராயக்கோட்டை மின்வாரிய அலுவலக பகுதியை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் சுந்தர்ராஜன், 42; இருவரும் உறவினர்கள். அவ்வப்போது சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர்.
கடந்த, 2016 பிப்., 2ல் இருவரும் மது குடித்துள்ளனர். அப்-போது தன் பெற்றோர் தத்தெடுத்து வளர்க்கும் கோகிலா என்ற பெண்ணுக்கு சொத்து சென்று விடும். எனவே பெற்றோர், கோகி-லாவை கொலை செய்ய வெங்கடேசன் கூறியுள்ளார். தவறு எனக்கூறி சுந்தர்ராஜன் வாக்குவாதம் செய்துள்ளார். பிறகு இரு-வரும் மொபட்டில் வீட்டுக்கு கிளம்பினர். பின்னால் அமர்ந்து சென்ற சுந்தர்ராஜன், கழுத்தை கத்தியால் வெட்ட முயன்றபோது, வெங்கடேசன் தடுத்ததால், இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். சுதாரித்து எழுந்த சுந்தர்ராஜன், வெங்கடேசன் கழுத்தை பலமுறை மிதித்தும், கத்தியால் மார்பில் குத்தியும் கொலை செய்தார். ராயக்கோட்டை போலீசார் சுந்தர்ராஜனை கைது செய்தனர்.இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சந்தோஷ் நேற்று தீர்ப்பளித்தார். சுந்தர்ராஜனுக்கு ஆயுள் தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தர-விட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சின்ன பில்-லப்பா ஆஜராகினார்.