/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முத்து பிடாரியம்மன் கோவில் திருவிழா
/
முத்து பிடாரியம்மன் கோவில் திருவிழா
ADDED : செப் 12, 2024 07:00 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, நேதாஜி சாலை முருகர் நகரில் அமைந்துள்ள, முத்து பிடாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 9ல் கணபதி ஹோமம் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்-தினம், பக்தர்கள் ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று காலை, முத்து பிடாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, அபி-ஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.ஏராளமான பெண்கள் மேள தாளங்களுடன் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதில், கோவில் பூசாரி, கரகம் சுமந்தும், பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் கோவிலுக்கு வந்தனர்.அங்கு, ராஜகணபதி, ஓடத்து காளியம்மன், தேசத்து மாரியம்மன், நாக கன்னியம்மன், ஜல கன்னியம்மன் மற்றும் உக்கிர முனி-யாண்டி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.