/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
/
போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 25, 2025 06:52 AM
ஓமலுார்: பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
சேலம் மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, நேற்று மதியம் ஓமலுார் சப்-டிவிஷனுக்குட்பட்ட போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சேலம் எஸ்.பி.,கவுதம்கோயல் பங்கேற்று, சமூக நலத்துறை சார்பில் வைக்கப்பட்ட, பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி கையெழுத்து இயக்க பேனரில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை எஸ்.பி., கவுதம்கோயல் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஓமலுார் பெரமெச்சூர் பிரிவு ரோட்டில் துவங்கிய பேரணி, ஆர்.சி.,செட்டிப்பட்டி பிரிவு ரோடு, தர்மபுரி-சேலம் பைபாஸ் வழியாக, மீண்டும் துவங்கிய இடத்-துக்கு வந்தது. ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார், சமூகநலத்துறை அலுவலர் கார்த்திகா உடனிருந்தனர்.