/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தங்கும் விடுதி உரிமையாளர் கொலையில் துப்பு கிடைக்காததால் போலீசார் திணறல்
/
தங்கும் விடுதி உரிமையாளர் கொலையில் துப்பு கிடைக்காததால் போலீசார் திணறல்
தங்கும் விடுதி உரிமையாளர் கொலையில் துப்பு கிடைக்காததால் போலீசார் திணறல்
தங்கும் விடுதி உரிமையாளர் கொலையில் துப்பு கிடைக்காததால் போலீசார் திணறல்
ADDED : ஜூலை 08, 2024 05:31 AM
ஓசூர் : ஓசூரில் நடந்த தங்கும் விடுதி உரிமையாளர் கொலையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், கொண்டவார்பள்ளியை சேர்ந்தவர் கலுாரி அசானய்யா, 26; இவர், ஓசூர் தனியார் கல்-லுாரி அருகே உள்ள காமராஜ் நகரில், அரசனட்டியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான, 3 மாடி கட்டடத்தை வாடகைக்கு எடுத்து, ஆண்கள் தங்கும் விடுதி நடத்தி வந்தார். கடந்த, 5 ல், விடுதியின், 2வது தளத்திலுள்ள தன் அறையில், கழுத்து அறுக்கப்பட்டு, வயிற்றில் குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
ஹட்கோ போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கலுாரி அசானய்யாவுடன் சேர்ந்து விடுதியை நடத்தலாம் என, அவரது உறவினர் சின்னபாலுடு கேட்டதும், அதற்கு முடியாது என, கலுாரி அசானய்யா கூறி-யதால், சின்னபாலுடு மிரட்டி விட்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, சின்னபாலுடுவை அழைத்து வந்து, ஹட்கோ போலீசார் விசாரித்தனர். இதில் அவருக்கு கொலையில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. மற்றபடி, கலுாரி அசானய்யா-விற்கு முன்விரோதம் ஏதும் இல்லாததால், அவரது கொலைக்-கான எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்காமல் திணறி வருகின்-றனர். கடைசியாக, அவரது மொபைல்போனுக்கு வந்த அழைப்-புகள் மற்றும் இவர் போன் செய்த அழைப்புகளை பெற்று, அதன் மூலம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கலுாரி அசானய்யா கொலையான நேரத்தில், அவர் நடத்தி வந்த விடுதிக்கு வந்து சென்றவர்களை அழைத்து வந்தும், விசாரித்து வருகின்றனர்.