/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையில் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் அதிருப்தி
/
சாலையில் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் அதிருப்தி
ADDED : மார் 02, 2025 07:00 AM
அரூர்: அரூர் டவுன் பஞ்., 12வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, கோவிந்தசாமி நகர், கோல்டன் சிட்டி பகுதியில், 300க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்பு-களில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர், அங்குள்ள சாலையோர குழியில் குளம்போல் தேங்கியுள்ளது. அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர், அரூர்-சிந்தல்பாடி சாலையில், பெருக்கெ-டுத்து ஓடுவதுடன், பாரதியார் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு செல்கிறது.
கழிவு நீர் ஓடுவது குறித்து, டவுன் பஞ்., நிர்வாகத்திடம் பல-முறை புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவு நீரால் கொசு உற்பத்தி அதிகரித்து, பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். சாலையில் கழிவு நீர் செல்வதை தடுக்க, நடவடிக்கை எடுப்ப-துடன், சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.