sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சீரமைத்த தற்காலிக மண் சாலை சகதியில் சிக்கிய வாகனங்கள்

/

சீரமைத்த தற்காலிக மண் சாலை சகதியில் சிக்கிய வாகனங்கள்

சீரமைத்த தற்காலிக மண் சாலை சகதியில் சிக்கிய வாகனங்கள்

சீரமைத்த தற்காலிக மண் சாலை சகதியில் சிக்கிய வாகனங்கள்


ADDED : ஆக 19, 2024 12:30 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த தல்சூரில் இருந்து, குருபட்டி கிரா-மத்திற்கு தார்ச்சாலை செல்கிறது. இதில், புதிய தரைப்பாலம் கட்டும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு கடந்த இரு மாதங்க-ளுக்கு முன் பணி துவங்கப்பட்டது.

புதிய பாலம் கட்ட, சாலை குறுக்கே பள்ளம் தோண்டியுள்ளனர். அதனால், வாகன ஓட்டிகள் சென்று வர வசதியாக, அருகில் தற்காலிக மண் சாலை அமைத்-துள்ளனர். தேன்கனிக்கோட்டை சுற்றுப்புற பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கடந்த, 12ல் தற்காலிக மண் சாலையில் அரிப்பு ஏற்பட்டு துண்டானது. இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவ-தியடைந்தனர்.

பாலம் கட்டும் பணி, மந்தகதியில் நடப்பதாக கூறி, குருபட்டி கிராம மக்கள் கடந்த, 12ல் மறி யல் போராட்டத்தில் ஈடுபட் டனர். கெலமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, துண்-டான தற்காலிக மண் சாலையை சீரமைத்தனர். இச்சாலை மிகவும் சேறும், சகதியுமாக காணப்பட்ட நிலையில், நேற்று அவ்-வழியாக சென்ற லாரி உட்பட பல வாகனங்கள் சகதியில் சிக்-கின. வாகனங்களை வெளியேற்ற டிரைவர்கள் கடும் சிரமப்பட்-டனர். அவ்வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே, பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்






      Dinamalar
      Follow us