ADDED : ஜூலை 13, 2011 02:19 AM
ஊத்தங்கரை : ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஏழை மாணவர்களுக்கு, இலவச சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
ஆசிரியர் கணேசன், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, துறிஞ்சிப்பட்டி, கைலாயபுரம், மாரம்பட்டி, அனுமந்தீர்த்தம், மிட்டப்பள்ளி, என். வெள்ளாளப்பட்டி, உப்பாரப்பட்டி, கீழ்குப்பம், ஜோதிநகர், வடுகனூர், நாப்பிராம்பட்டி, படப்பள்ளி, ஊத்தங்கரை அரசு துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு தேவையான இலவச சீருடைகள், கல்வி உபகரணங்களை வாங்கிக் கொடுத்தார். அதை, தலைமையாசிரியர் பொன்னுசாமி, ஆசிரியர் கணேசன் ஆகியோர் வழங்கினார். உதவி தலைமையாசிரியர்கள் வேடியப்பன், சீனிவாசகுப்தா, செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

