sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

/

பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை


ADDED : ஜூலை 13, 2011 11:58 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே, நான்கு சக்கர வாகன உதிரிபாகம் விற்பனை செய்யும் கடையில், ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடிச் சென்றவர்களை, போலீஸார் தேடி வருகின்றனர்.

ஈரோட்டை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், குந்தாரப்பள்ளி கூட்டுரோடு அருகே நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடை மேலாளர் பிரபாகரன் வழக்கம் போல் கடையை மூடி சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடை ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பிரபாகரன், உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள் திருடு போய் இருப்பது தெரிந்தது. குருபரப்பள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us