ADDED : ஏப் 01, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட் டம், காவேரிப்பட்டணத்தில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம், முப்பெரும் சங்கம திருவிழா நேற்று நடந்தது. இதில், கந்திகுப்பம் பைரவ சுவாமிகள், வாதவூரார் அடிகள் திருவீதி உலா பேரணியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிவனடியார் குமரேசன் வரவேற்றார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முத்துப்பாண்டி முன்னிலை வைத்தார். உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் இணை ஆலோசகர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கதுரை சுவாமிகள் பேசினார்.
நிகழ்ச்சியில், சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன. சிவசங்கரன் நன்றி கூறினார்.

