நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரு பெண்கள் மாயம்
கிருஷ்ணகிரி, அக். 9-
குருபரப்பள்ளி அடுத்த சாமந்தமலையை சேர்ந்தவர் அம்சா, 40. அதே பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் சத்துணவு ஊழியராக
பணிபுரிந்தார்.
கடந்த, 4ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து அவரது கணவர் மாது என்பவர் குருபரப்பள்ளி போலீசில் புகாரளித்தார். அதில், போச்சம்பள்ளி அடுத்த மல்லிக்கல்லை சேர்ந்த வெங்கடேசன், 35, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓசூர் அடுத்த குமுதேப்பள்ளியை சேர்ந்தவர் காயத்ரி, 29. கடந்த, 5ல், கணவரிடம் கோபித்து கொண்டு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. காயத்ரியின் தந்தை அளித்த புகார் படி ஓசூர் ஹட்டோ போலீசார்
விசாரிக்கின்றனர்.